தீவிரவாதச் செயல்களை பாகிஸ்தான் ஆதரித்து வருவதாக அமெரிக்கா குற்றச்சாட்டு.


பாகிஸ்தானில் செயல்படும் தீவிரவாதிகள் மீதும் ஆளில்லா விமானத் தாக்குதல் நடத்தப்படும் என்று அந்நாட்டுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா அரசில் இருந்த பாதுகாப்புச் செயலாளர் டேவிட் சிட்னி இதனைத் தெரிவித்து உள்ளார்.
கடந்த 16 ஆண்டுகளாக தாலிபான்களுக்கு எதிராக போரிட்டும் அமெரிக்கா வெற்றி பெற முடியாததற்கு பாகிஸ்தானில் இருந்து செயல்படும் பயங்கரவாதக் குழுக்களே காரணம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஹக்கானி குழு அமெரிக்காவுக்கு மிகப் பெரும் அச்சுறுத்தல் என்று டேவிட் சிட்னி கூறியுள்ளார்.
எனவே ஆப்கானிஸ்தானில் நடத்தப்படும் ஆளில்லா விமானத் தாக்குதலைப் போலவே பாகிஸ்தானில் செயல்படும் தீவிரவாத இலக்குகளைத் தாக்க டிரம்ப் அரசு முடிவு செய்துள்ளதாக அவர் கூறியுள்ளார். ஆனால் இதற்கான காலவரைமுறை எதுவும் நிர்ணயம் செய்யப்படவில்லை என்றும் டேவிட் சிட்னி கூறியுள்ளார். அமெரிக்காவின் இந்தக் கருத்தால் பாகிஸ்தான் அதிர்ச்சி அடைந்துள்ளது.
Labels:

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.