கத்தாருக்கு ஆதரவாக கருத்து வெளியிட ஐக்கிய அரபு அமீரகம் தடை.


கத்தார் நாட்டுக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் கருத்துகள் வெளியிட ஐக்கிய அரபு அமீரகம் தடை விதித்துள்ளது.
தீவிரவாத அமைப்புகளுக்கு உதவுவதாகக் கூறி, கத்தார் நாட்டுடனான தூதரக உறவை சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், எகிப்து, ஏமன், பஹ்ரைன் ஆகிய நாடுகள் முறித்துக் கொண்டன. இந்த விவகாரத்தில் கத்தார் நாட்டுக்கு அதரவாக ஃபேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை வெளியிட ஐக்கிய அரபு அமீரகம் தடை விதித்துள்ளது.
இதுகுறித்த அந்நாட்டின் அட்டார்னி ஜெனரல் ஹமாத் சைப் அல் ஷம்சி (Hamad Saif al-Shamsi) வெளியிட்டுள்ள அறிக்கையில், தடையை மீறி சமூக வலைத்தளங்களில் கத்தாருக்கு ஆதரவான கருத்துக்களை வெளியிட்டால், 3 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை சிறைதண்டனை விதிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஒரு லட்சத்து 36 ஆயிரம் டாலருக்கு குறையாமல் அபராதமும் விதிக்கப்படும் என்றும் அதில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
Labels:

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.