கல்லூரி கட்டணங்களை ரொக்கமாக வசூலிக்கக் கூடாது என மத்திய அரசு அதிரடி.


கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்களில் கட்டணங்களை ரொக்கமாக வசூலிக்கக்கூடாது என்றும், அனைத்து கட்டணங்களையும் டிஜிட்டல் முறையில்தான் செலுத்த வேண்டும் என்றும் பல்கலைக்கழக மானியக்குழு மூலமாக மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
கல்லூரிகளில் மாணவர்கள் செலுத்தும் தேர்வுக் கட்டணங்கள் உட்பட அனைத்து வகை கட்டணங்களும் ரொக்கமாகவே செலுத்தும் முறை உள்ளது. ஒரு சில சந்தர்ப்பங்களில் மட்டுமே டிமாண்ட் டிராப்ட் மூலம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இந்நிலையில் மாணவர்களிடமிருந்து எந்தவிதக் கட்டணங்களையும் ரொக்கமாக வசூலிக்கக் கூடாது என்றும் மின்னணு பணப்பரிமாற்றம் மூலமாகவே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்றும் மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
கல்வி நிறுவனங்களில் மட்டுமின்றி மாணவர்கள் தங்கும் விடுதிகள் மற்றும் கல்வி வளாகத்தில் செயல்படும் உணவகங்கள் போன்றவையும் மின்னணு முறைக்கு மாற ஊக்குவிக்கப்படவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த கல்வியாண்டு முதலே இது நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த நடைமுறை கடைபிடிக்கப்படுவதைக் கண்காணிக்க தனி அதிகாரி ஒருவரை நியமித்து மாதந்தோறும் பல்கலைக்கழக மானியக்குழுவுக்கு அறிக்கை அளிக்கவும் அனைத்துப் பல்கலலைக்கழகங்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.