ஓ.பி.எஸ் அமைக்கும் ஆழ்துளை கிணறுகளால் குடிநீர் தட்டுப்பாடு என புகார் : கிராம மக்கள் சாலை மறியல்.


தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நிலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆழ்துளை கிணறுகளால், அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் வற்றிவிட்டதாக கூறி 2-வது நாளாக ஊர்மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பெரியகுளம் அடுத்துள்ள லட்சுமிபுரத்தில் விவசாய நிலங்களை வாங்கியுள்ள ஓ.பன்னீர்செல்வம், அங்கு ஆழ்துளை கிணறுகள் அமைத்து அதிவேக மின்மோட்டார்கள் பொறுத்தியுள்ளதாக ஊர்மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதனால், 100 அடி ஆழம் மட்டுமே உள்ள கிராம சமுதாய கிணறுகளில் தண்ணீர் வற்றி, குடிநீருக்கே அலையவேண்டியுள்ளதாகவும் அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இந்நிலையில், ஓ.பி.எஸ் இல்லத்தில் மேலும் ஒரு கிணறு தோண்டி பம்ப்செட் அமைக்கப்பட்டதாக கூறி ஆத்திரமடைந்த ஊர்மக்கள், நேற்றும் இன்றும் தேனி-திண்டுக்கல் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது, புதிதாக தோண்டப்பட்டு வரும் ஆழ்துளை கிணற்றுப் பணிகளை நிறுத்தவேண்டும் அல்லது அந்த கிணற்றை பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக ஊர் பஞ்சாயத்துக்கு தானமாக ஒப்படைக்கவேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, ஆழ்துளை கிணறு தோண்டும் பணியை நிறுத்திக்கொள்வதாக ஓ.பி.எஸ் தரப்பிலிருந்து கூறப்பட்டதால், மறியல் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.