போர்ச்சுக்கல் நாட்டில் ஏற்பட்ட பயங்கர காட்டுத் தீயில் சிக்கி 57 பேர் பலி


போர்ச்சுக்கல் நாட்டில் ஏற்பட்ட பயங்கர காட்டுத் தீயில் சிக்கி 43 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
போர்ச்சுக்கல் நாட்டின் பெட்ராகோ மற்றும் கிராண்டே ஆகிய நகரங்களுக்கு மத்தியில் உள்ள காட்டுப்பகுதியில் கடந்த பத்தாண்டுகளில் இல்லாத அளவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயின் வீரியம் கட்டுக்கடங்காமல் பரவி வருவதால், காட்டைச் சுற்றியுள்ள பகுதிகளில் அனல் தகிக்கிறது.
காட்டுக்கு நடுவில் செல்லும் சாலைகளில் பயணித்துக் கொண்டிருந்தவர்கள் தங்கள் வாகனங்களுடன் எரிந்து சாம்பலாயினர். இதுவரை 57 பேர் தீயில் கருகி உயிரிழந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
கொழுந்து விட்டு எரியும் தீயை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு 600க்கும் அதிகமான தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். தீயில் சிக்கி காயமடைந்த 60-க்கும் மேற்பட்டோரில் பலரின் நிலை கலலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது. அருகிலுள்ள கிராமங்களில் வசிப்போர் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
ஆபத்தில் இருப்பவர்களை கண்டறிந்து அவர்களை மீட்கும் பணியில் உயிரைப் பொருட்படுத்தாது தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். இதில், தீயணைப்பு வீரர்கள் பலரும் உயிரிழந்துள்ளனர். மேலும் 100க்கும் அதிகமான வாகனங்கள் கருகிவிட்டன.
Labels:

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.