டாஸ்மாக் கடைகளில் பார் அமைக்க உரிமம் வழங்குவதற்கான டெண்டர் ரத்து.


தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் பார் அமைக்க உரிமம் வழங்குவதற்கான டெண்டரை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக் கடைகளில் பார் அமைக்க உரிமம் வழங்குவதற்காக, கடந்த மே மாதம் 2 டெண்டர்கள் வெளியிடப்பட்டன.
அதில், அதிக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே டெண்டர்களை ரத்து செய்யவும் கோரி தமிழகம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட பார் உரிமையாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர்.
அவற்றில், பார் உரிமத்துக்கான டெண்டருக்கு விதிமுறைகள் வகுக்கவும், கடை விற்பனைக்கேற்ப விலையை நிர்ணயிக்கவும் ஏற்கனவே உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது சுட்டிக் காட்டப் பட்டிருந்தது. இந்த தீர்ப்பை மீறும்வகையில் தற்போது டெண்டர் பிறப்பிக்கப் பட்டிருப்பதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மனுக்கள் நீதிபதி ஆர்.மகாதேவன் முன் விசாரணைக்கு வந்தபோது, இந்த டெண்டர் நடவடிக்கைகளை கைவிட்டு, புதிய அறிவிக்கையை வெளியிட உள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மே மாதம் வெளியிடப்பட்ட டெண்டர் அறிவிக்கையை நீதிபதி ரத்து செய்தார்.
மேலும், உயர் நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவின்படி, 4 வாரங்களுக்குள் புதிய டெண்டர் அறிவிப்பை வெளியிட வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.