மீத்தேன் திட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்த சமூகவலைதளம் மூலம் அழைப்பு.


தஞ்சையில் மீத்தேன் திட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்த சமூக வலைதளங்களில் அழைப்பு விடுக்கப்பட்டதை அடுத்து, நகரம் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் மீத்தேன் எடுக்கவும், நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தவும் எதிர்ப்பு தெரிவித்து, போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. உழவர் விடுதலை இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஏனாதி பூங்கதிர்வேல் என்பவர், தஞ்சை புரட்சி என்ற பெயரில் போராட்டம் நடத்த பேஸ்புக் மூலம் இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
தஞ்சை பெரியகோயிலில் போராட்டம் நடைபெற உள்ளதாகவும், அங்கு வருபவர்கள் கற்பூரம் மற்றும் தீப்பெட்டியுடன் வரவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார். இதையடுத்து, இன்று அதிகாலை பூங்கதிர்வேலை போலீசார் கைது செய்தனர். இருப்பினும், பேஸ்புக் மூலம் விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று, தஞ்சை பெரியகோயிலில் இளைஞர்கள் போராட்டம் நடத்தலாம் என்ற சந்தேகத்தை அடுத்து, தஞ்சை பெரியகோயில், சிவகங்கை பூங்கா, பழைய மற்றும் புதிய பேருந்து நிலையங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் நகர் முழுவதும் சாலைகளில் தடுப்புகளை ஏற்படுத்தியுள்ள போலீசார், இருசக்கர வாகனங்களில் சென்று தீவிரமாக சோதித்து வருகின்றனர். அதேபோல், போராட்டத்துக்கு வருவோர் கற்பூரம் மற்றும் தீப்பெட்டியுடன் வரவேண்டும் என்று கூறப்பட்டிருந்ததால், கற்பூரத்துடன் செல்வோரை போலீஸ் தடுத்து நிறுத்தி விசாரித்து வருகின்றனர்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.