தொண்டர்களின் கோரிக்கையை ஏற்று துணை பொதுச் செயலாளர் பொறுப்பை தொடர்வேன்: டிடிவி தினகரன்.


ஆட்சியின் நடவடிக்கைகள் எடப்பாடி பழனிசாமி தலைமையிலேயே தொடரும் ஆனால் துணை பொதுச் செயலாளர் என்கிற முறையில் கட்சியை கட்டுப்பாட்டுடன் நான் நடத்துவேன் என்று அதிமுக அம்மா அணியின் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
பெங்களூரூ பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலாவை சந்திப்பதற்காக அங்கு சென்ற தினகரன் ஓசூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
நான் இருந்தால் பிரச்சினை என்றார்கள் அதனால் ஒதுங்கியிருந்தேன், ஆனால் 45 நாட்கள் சிறையிலிருந்து திரும்பி வந்து பார்க்கும் போது எதுவும் மாறவில்லை. அப்படியிருக்கும் போது கட்சியையும் ஆட்சியையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பை நான் எடுத்து செய்தாக வேண்டும்.
அடுத்த கட்ட செயல் திட்டம் குறித்து ஒப்புதல் பெறுவதற்காக கட்சியின் பொதுச் செயலாளரை சந்திக்க வந்துள்ளேன். அவரின் வழிகாட்டுதலின் படி செயல்படுவேன். அனைத்து அமைச்சர்களையும் கூறிவிட முடியாது. ஒரு சில அமைச்சர்கள் மட்டுமே ஏதோ பயம் காரணமாக என்னை எதிர்க்கிறார்கள் அவர்களும் அந்த பயத்திலிருந்து வெளியே வருவார்கள்.
கட்சியையும் ஆட்சியையும் பாதுகாக்க தொண்டர்கள் வைத்த கோரிக்கையை ஏற்று செயல்படுவேன். என்னை வரவேற்க இங்கு வரும் கூட்டம் தானாக திரண்ட கூட்டம். இவர்களுக்குத்தான் நான் கடமைப்பட்டுள்ளேன். முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி தொடரும் அதை நான் தொந்தரவு செய்ய விரும்பவில்லை. அது அவருக்கும் தெரியும்.
அமைச்சர்களும் கட்சி தொண்டர்களே கட்சிக்கு கட்டுப்பட வேண்டும். கட்சி தலைமைக்கு கட்டுப்பட வேண்டும். கட்டுப்படுவார்கள் என நம்புகிறேன் கட்சிக்கு தலைமை பொதுச் செயலாளர் அவர் தற்போது செயல்பட முடியாத நிலையில் இருப்பதால் அடுத்து இருப்பது துணை பொதுச் செயலாளராக ஆகிய நான் தான்” என்றார்.
கடந்த இரு தினங்களாகவே கட்சிப் பணிகளை மேற்கொள்ள இருப்பதாக டிடிவி தினகரன் தொடர்ந்து சொல்லி வரும் நிலையில் தானே துணை பொதுச் செயலாளர் என்று அவர் மீண்டும் பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.