சசிகலாவுடன் பெங்களூர் சிறையில் டி.டி.வி தினகரன் மற்றும் தம்பிதுரை சந்திப்பு.


குடியரசுத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க வேட்பாளரை ஆதரிப்பது குறித்து டிடிவி தினகரன் மற்றும் தம்பிதுரை ஆகியோர் பெங்களூரு சென்று அதிமுக அம்மா அணியின் பொதுச்செயலாளர் சசிகலாவை சந்தித்துப் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
டிடிவி தினகரன் அவரது குடும்பத்தினருடன், பெங்களூரு பரப்பன அக்கிரஹார சிறைக்கு சென்று சசிகலாவை சந்தித்துப் பேசினார். ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா விவகாரம், கூவத்தூரில் எம்எல்ஏ.க்கள் பேரம் பேசப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து டிடிவி தினகரன் சசிகலாவுடன் பேசியதாகக் கூறப்படுகிறது.
மிகமுக்கியமாக, குடியரசுத் தலைவர் தேர்தலில் எடுக்க வேண்டிய நிலைப்பாடு குறித்தும் ஆலோசித்ததாகக் கூறப்படுகிறது. இதேபோல, அதிமுக கொள்கை பரப்புச் செயலாளரும், மக்களவை துணைத் தலைவருமான தம்பிதுரையும் பெங்களூரு சிறைக்கு சென்று, சசிகலாவை சந்தித்துப் பேசியுள்ளார்.
அவரும் குடியரசுத் தலைவர் தேர்தலில் எடுக்க வேண்டிய நிலைப்பாடு குறித்து எடுத்துரைத்ததாகக் கூறப்படுகிறது. கடந்த வாரத்தில் வெங்கய்யா நாயுடுவை அவரது இல்லத்திற்கு சென்று தம்பிதுரை சந்தித்தபோது, பாஜக-வின் குடியரசுத் தலைவர் வேட்பாளரை ஆதரிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டதாகக் கூறப்பட்டது.
அப்போது குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்து அதிமுக தலைமைக் முடிவெடுக்கும் என தம்பிதுரை கூறியிருந்தார். இதைத் தொடர்ந்தே தம்பிதுரை சசிகலாவை சந்தித்துப் பேசியுள்ளார். அதிமுக-விலிருந்து தினகரன் குடும்பத்தினரை ஒதுக்கி வைப்பதாக, அறிவிக்கப்பட்டதன் பிறகு முதன்முறையாக சசிகலாவை தம்பிதுரை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.