சென்னையில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: தமிழ்நாடு வெதர்மேன்.


வெப்பச் சலனம் காரணமாக சென்னையில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை வலைப்பதிவர் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
அதுவும் இந்த 5 நாட்களில் 2 முதல் 3 நாட்களாவது குறிப்பிடத்தக்க அளவு மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது என அவர் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறும்போது, "காற்றின் சுழற்சி சாதகமாக இருப்பதால் சென்னை உட்பட வட தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.
சென்னையை வர்தா புயல் தாக்கி 6 மாதங்கள் ஆகிய நிலையில் சென்னையில் இந்த மூன்று நாட்களில் குறிப்பிடத்தக்க அளவு மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதேபோல் கர்நாடகா மாநிலம் குடகு பகுதியிலும் மழைக்கு வாய்ப்பிருக்கிறது" என்றார்.
கடந்த 24 மணி நேரத்தில் திருநெல்வேலி பாபநாசத்தில் 140 மி.மீ., மழை பெய்தது.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.