டிடிவி தினகரனை சார்ந்தவர்களுடன் எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை-அமைச்சர்கள்.


இரட்டை இலை சின்னத்தைப் பெற தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக கூறப்படும் வழக்கில் ஜாமீனில் வெளிவந்துள்ள டி.டி.வி.தினகரன், தாம் தொடர்ந்து கட்சிப் பணியில் ஈடுபட இருப்பதாக கூறியிருந்தார்.
தினகரனின் கருத்து தொடர்பாக முதலமைச்சர்தான் பதிலளிப்பார் என்று அமைச்சர்கள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் தலைமை செயலகத்தில் அமைச்சர்கள்கூடி ஆலோசனை நடத்தினர். இதில் அமைச்சர்கள் ஜெயக்குமார், செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, மணிகண்டன் செல்லூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 20 பேர் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து அவரகள் அனைவரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர்கள் டிடிவி தினகரன் சார்ந்தவர்களை கட்சியிலிருந்து முழுமையாக விலக்கி வைப்பது என்ற முடிவில் உறுதியாக இருப்பதாகத் தெரிவித்தனர். முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆட்சி நடத்தி வருவதாகவும் அதிமுக நிர்வாகத்தில் தொடர்புடையவர்கள் டிடிவி தினகரனை சந்திக்க மாட்டார்கள் என்றும் அவர்கள் கூறினர்.

தினகரனை சார்ந்தவர்களுடன் எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.