சட்டப்பேரவையில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு துறைகள் மீதான மானியக் கோரிக்கைகள் இன்று விவாதம்.


சட்டப்பேரவையில் ஜிஎஸ்டி மசோதா இன்று விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளது. தமிழக பட்ஜெட் கடந்த மார்ச் மாதம் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்துக்காக, சட்டப்பேரவைக் கூட்டம் கடந்த 14-ம் தேதி தொடங்கியது.
3 நாட்கள் நடைபெற்ற கூட்டத்தில், வனத்துறை, சுற்றுச்சூழல், பள்ளி கல்வி, உயர்கல்வி, கூட்டுறவு மற்றும் உணவுத்துறை ஆகிய துறைகள் மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடந்தது. பின்னர் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை 2 தினங்கள் சட்டசபைக்கு விடுமுறை விடப்பட்டது. இதைத் தொடர்ந்து, தமிழக சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது.
கேள்வி நேரத்திற்குப் பின்னர், மின்சாரம், மதுவிலக்கு, ஆயத்தீர்வை துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது. தமிழக ஜிஎஸ்டி மசோதாவும் இன்று விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளது.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.