ஐஐடி போராட்டத்தில் மாணவி கை முறிப்பு விவகாரம்: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.


மாட்டிறைச்சி விவகாரத்தில் ஐஐடி மாணவர் தாக்கப்பட்டதை கண்டித்து போராடிய மாணவியின் கை முறிக்கப்பட்ட சம்பவத்தில், உள்துறை செயலாளரும், சென்னை மாநகர காவல் ஆணையரும் பதிலளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
ஐஐடி வளாகத்தில் மாட்டிறைச்சி சாப்பிட்ட மாணவர் தாக்கப்பட்டதைக் கண்டித்து புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியினர் சென்னை ஐஐடி முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்களை அப்புறப்படுத்த முயற்சித்தபோது, இளவரசி என்ற மாணவியின் கையை போலீஸார் முறித்ததாக புகார் கூறப்பட்டது. இது தொடர்பாக அந்த இயக்கத்தைச் சேர்ந்த ராஜசேகர் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் அமர்வில் இன்று விசாரிக்கப்பட்டது. இது தொடர்பாக தமிழக உள்துறை செயலாளரும், சென்னை மாநகர காவல் ஆணையரும் பதிலளிக்குமாறு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை 2 வாரத்திற்கு ஒத்திவைத்தார்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.