மத்தியில் ஆளும் பா.ஜ.கவின் பினாமியாக செயல்படுகிறது தமிழக அரசு: ஸ்டாலின்.


மத்திய பா.ஜ.க.வின் பினாமி அரசாக தமிழக அரசு நடந்து வருவதாக திமுக செயல் தலைவர் மு. க. ஸ்டாலின் குற்றம் சாட்டி உள்ளார். தமிழக அரசு திவாலாகும் அளவிற்கு 3 லட்சம் கோடி ரூபாய் கடன் சுமையை உண்டாக்கியதுதான் தற்போதைய ஆட்சியாளர்களின் சாதனை என்று ஸ்டாலின் தான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளார்.
நாடாளுமன்றத்தில் ஏறத்தாழ 50 எம்.பிக்களை வைத்திருக்கும் அதிமுக அரசால் நீட் தேர்விலிருந்து விலக்களிக்கும் மசோதாவுக்கு சட்ட அங்கீகாரம் பெற முடிந்ததா என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். மாடுகள் விற்பனைக்கு கட்டுப்பாடு விதித்துள்ள மத்திய அரசின் அறிவிப்பை எதிர்த்து, கேரளா புதிய சட்டத்தை இயற்றியுள்ளதை குறிப்பிட்டுள்ள ஸ்டாலின், அதுபோன்ற சட்டத்தை தமிழக அரசு இயற்றாதது ஏன் என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
தமிழக பிரச்சினைகளில் கவனம் செலுத்தாமல், மத்திய பா.ஜ,க., அரசின் மூன்றாண்டு சாதனைகளை மலராக வெளியிட்ட, மாநில அரசு பினாமி அரசாகத்தான் இருக்கும் என்றும் ஸ்டாலின் கூறி உள்ளார்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.