சிலை கடத்தல் வழக்கில் காவல் உதவி ஆய்வாளர் கைது – டி.எஸ்.பி தலைமறைவு.


அருப்புக்கோட்டையில் 2008 ஆம் ஆண்டு பறிமுதல் செய்யப்பட்ட சிலையை நீதிமன்றத்தில் ஒப்படைக்காமல் கடத்தல் கும்பலிடம் 25 லட்சம் ரூபாய்க்கு விலைபேசி விற்ற காவல் உதவி ஆய்வாளர் ஒருவரை தற்போதைய சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ள பழங்கால கோவில்களில் இருந்து திருடப்பட்டு வெளி நாடுகளுக்கு கடத்தப்பட்ட சிலைகளை மீட்பதில் சிலைகடத்தல் தடுப்பு காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
டிஜிபி டி.கே. ராஜேந்திரன் மேற்பார்வையின் பேரில் பொருளாதார குற்றப்பிரிவு ஏ.டி.ஜி.பி ஜாங்கிட் கண்காணிப்பில், சிலைகடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன் மாணிக்க வேலின் தலைமையில் தற்போது சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. இதுவரை 900 சிலைகளை மீட்டு சாதனை படைத்துள்ளனர். குறிப்பாக வெளி நாட்டில் இருந்து பழமையான 8 சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. 250 கோடி ரூபாய் மதிப்பிலான சிலை கடத்தலையும் தடுத்துள்ளது தற்போதைய சிலைகடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறை.
அருப்புக்கோட்டை ஆலடிபட்டி கிராமத்தை சேர்ந்த ஆரோக்கியராஜ் என்பவர் தனது விவசாய நிலத்தில் புதையலாக கிடைத்த சிவன் பார்வதி உள்ளிட்ட 6 சிலைகளை விற்க முயற்சிப்பதாக 2008 ஆம் ஆண்டு மதுரை சிலைகடத்தல் தடுப்பு பிரிவில் இருந்து அருப்புக்கோட்டை இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்ற காதர் பாஷா, ஏட்டு சுப்புராஜ் ஆகியோருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அங்கு சென்ற இருவரும் ஆரோக்கியராஜை மிரட்டி அடித்து உதைத்து அவரிடம் இருந்து 6 சிலைகளையும், 2 ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்தையும் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக வழக்கு ஏதும் பதிவு செய்யாமல், சிலைகளை கோர்ட்டிலும் ஒப்படைக்காமல் சிலைகளை ஒரு மாதம் தங்களது பாதுகாப்பில் வைத்திருந்தனர்.பின்னர் சென்னை ஆழ்வார் பேட்டையை சேர்ந்த சிலை கடத்தல் மன்னன் தீனதயாளனிடம் அந்த 6 சிலைகளுக்கும் 25 லட்சம் ரூபாய் விலைபேசியுள்ளனர்.
அந்த சிலைகள் சேதம் அடைத்திருப்பதாக கூறி வாங்க மறுத்துள்ளார் தீனதயாளன், சிலைகளை வாங்க மறுத்தால் சிலை கடத்தல் வழக்கு போட்டு கைது செய்வோம் என்று மிரட்டி கட்டாயப்படுத்தி அந்த சிலைகளை விற்றுள்ளனர் . அதற்காக உடனடியாக 15 லட்சம் ரூபாயை விலையாக பெற்றதாகவும் கூறப்படுகிறது. இதனை கடந்த 2008 ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரை யாருக்கும் தெரியாமல் மறைத்துள்ளனர்.
காதர்பாஷா தற்போது திருவள்ளூரில் கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டாகவும், சுப்புராஜ் கோயம்பேடு காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராகவும் பணிபுரிந்து வருவது தெரியவந்தது. இதையடுத்து சிலைகடத்தல் வழக்கில் தொடர்புடைய சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சுப்புராஜை 26 ந்தேதி கோயம்பேட்டில் வைத்து ஐ.ஜி.பொன்மாணிக்கவேலின் தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட சுப்புராஜ் சிறையில் அடைக்கப்பட்டார். டி.எஸ்.பி காதர் பாஷா தலைமறைவாகி விட்டார். அவரை கைது செய்ய சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்
இந்த நிலையில் 2008 ஆம் ஆண்டில் காவல்துறையை சேர்ந்த காதர்பாஷா மற்றும் சுப்புராஜால் நிகழ்த்தப்பட்ட இந்த சிலை கடத்தல் சம்பவத்தை குறிப்பிட்டு சிலைகடத்தல் வழக்குகளை சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று யானை ராஜேந்திரன் என்ற வழக்கிறஞர் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதனுடன் பெயர் விவரம் குறிப்பிடாமல் காவலர் ஒருவர் எழுதியதாக கூறி கடிதம் ஒன்றையும் இணைத்திருந்தார்.
அவரது மனுவை விசாரித்த நீதிபதிகள் தற்போதைய சிலைகடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன்மாணிக்கவேலுவிடம் இது குறித்து கருத்து கேட்ட பின்னர் முடிவு செய்யப்படும் என்று வழக்கை 29 ந்தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டனர்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.