சட்டம் வந்து 8 ஆண்டுகளாகியும் பின்பற்றாமல் தனியார் பள்ளிகளில் அதிக கட்டண வசூல் என புகார்.


அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு மாணவர்-பெற்றோர் நலச்சங்கத்தினர் பள்ளிக் கல்வித்துறை செயலரிடம் மனு அளித்துள்ளனர்.
தமிழக பள்ளிகளில் சட்டத்தை மீறி அதிக கட்டணம் வசூலிப்பதாக அவர்கள் கல்வித்துறை செயலர் உதயச்சதிரனிடம் குற்றம்சாட்டினர். தமிழ்நாடு பள்ளிகள் கட்டண ஒழுங்குபடுத்துதல் சட்டம் 2009-ஐ முறையாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
கட்டண நிர்ணயக்குழு நிர்ணயித்த கட்டணத்தையே தனியார் பள்ளிகள் வசூலிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் அவர்கள் அளித்தனர். சட்டம் கொண்டுவரப்பட்டு 8 ஆண்டுகளாகியும் சரியாக பின்பற்றாமல் சட்டத்தை மீறி, அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது குற்ற நடவடிக்கை எடுக்குமாறும் அவர்கள் கேட்டுக் கொண்டனர்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.