தண்டனைக் காலம் முடிவடைவதற்கு முன் சஞ்சய் தத் விடுதலையான விவகாரம்.


சஞ்சய் தத்தை முன்கூட்டியே விடுதலை செய்தது ஏன் என்று மகாராஷ்டிரா அரசுக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கு விவகாரத்தில், சட்டவிரோதமாக ஆயுதம் வைத்திருந்ததாக சஞ்சய் தத்துக்கு மும்பை தடா நீதிமன்றம் 6 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. பின்னர் தண்டனைக் காலம் 5 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது. ஆனால் நன்னடத்தையை காரணம் காட்டி தண்டனை காலம் முடிவடைய 8 மாதங்கள் இருந்த நிலையில், புனே சிறையில் இருந்து சஞ்சய் தத் விடுவிக்கப்பட்டார்.
இதை எதிர்த்த பொதுநல வழக்கை விசாரித்த மும்பை உயர்நீதிமன்றம், சஞ்சய் தத்தின் நன்னடத்தை மதிப்பிடப்பட்டது எப்படி என்று கேள்வி எழுப்பியது. இதுதொடர்பாக அடுத்த வாரம் பதில் அளிக்கவும் மகாராஷ்டிர அரசுக்கு மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.