கோவாவில் சமந்தா - நாக சைதன்யா திருமணம்!


நடிகை சமந்தா - நாக சைதன்யா திருமணம் அக்டோபர் 6-ம் தேதி கோவாவில் நடைபெறுகிறது. இத்தகவலை நாக சைதன்யா தெரிவித்தார்.
தெலுங்கு சினிமாவின் டாப் ஹீரோவான நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யா. நடிகரான இவரும் நடிகை சமந்தாவும் நீண்ட நாட்களாகக் காதலித்து வந்தனர். ஜனவரி 29-ம் தேதி இவர்கள் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதில் குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொண்டார்கள். இவர்கள் திருமணம் வெளிநாட்டில் நடக்க இருப்பதாக தகவல் வெளியானது. பின்னர் இதை மறுத்த நாக சைதன்யா, ’திருமணம் அக்டோபர் 6-ம் தேதி நடக்கிறது. இந்தியாவில்தான் நடக்கும். இடம் இன்னும் முடிவாகவில்லை’ என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் கோவாவில் தங்கள் திருமணம் நடைபெற இருப்பதாக நாக சைதன்யா தெரிவித்துள்ளார். இவர்கள் திருமணம் இந்து, கிறிஸ்தவ முறைப்படி நடக்க இருக்கிறது.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.