ஓஎன்ஜிசி நிறுவனம் உடனே பணிகளை நிறுத்த வேண்டும்: தொடர் போராட்டம் நடத்தப்போவதாக வெய்யலூர் கிராம மக்கள் எச்சரிக்கை.


சேத்தியாத்தோப்பு - சிதம்பரம் சாலை அருகில் வெய்யலூர் கிராமம் உள்ளது. இக்கிராமத்தின் வயல்வெளியில் ஓஎன்ஜிசி நிறுவனம் சார்பில் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு எடுப்பதற்காக துரப்பண பணிகள் நடைபெற்று வருகின்றன. சுமார் 6 ஏக்கர் பரப்பளவில் இந்த பணி நடந்து வருகிறது. இதற்காக ஆண்டு குத்தகையாக சுமார் ரூ.70 ஆயிரம் தரப்பட்டு விவசாயிகளிடமிருந்து விளை நிலங்கள் பெறப்பட்டுள்ளன.
இப்பகுதி செழுமையான விவசாயப் பகுதியாகும். வீராணம் ஏரிக்கரையோரமாக உள்ள இப்பகுதியில் நெல், கரும்பு, உளுந்து போன்றவை பயிரிடப்படுகிறது. இது முற்றிலும் வீராணம் ஏரிப்பாசன பகுதியாக இருந்தாலும் வறட்சிக் காலங்களில் போர்வெல் மூலம் விவசாயம் செய்வதால் எப்போதும் பசுமையாக காணப்படும்.
இந்நிலையில் சில ஆண்டு களுக்கு முன்பு இப்பகுதியில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு இருக்கிறதா என்று ஆய்வு நடைபெற்றது. அதைத்தொடர்ந்து தற்போது துரப்பண பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதனால் அருகில் உள்ள வெய்யலூர், பரிபூரணநத்தம், வாழைக்கொல்லை, வடப்பாக்கம், ஓடாக்கநல்லூர், வெள்ளியக்குடி, வாக்கூர், நார்த்தங்குடி, தரசூர் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதை தடுத்து நிறுத்த வேண்டும் என்கின்றனர் அப்பகுதி மக்கள்.
இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் கூறுகையில், “தமிழகத்தில் வரலாறு காணாத வறட்சி நிலவுகிறது. எங்களுக்கு பாசன வசதி தந்த வீராணம் ஏரியும் வறண்டு விட்டது. நிலத்தடி நீரை நம்பித்தான் விவசாயம் செய்து வருகிறோம். குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்து கொள்கிறோம். ஓஎன்ஜிசி நிறுவனம் சார்பில் பல ஆயிரம் அடியில் போடப்பட்டுள்ள ராட்சஷ போர்வெல்களால் விவசாயத்திற்கும், குடிநீருக்கும் தண்ணீர் பெறமுடியாத நிலை ஏற்படும்.
மேலும், பூமிக்கு அடியிலிருந்து கச்சா எண்ணெய் ஆய்வுப் பணியின்போது வெளியேற்றப்படும் கழிவுகள் அப்பகுதியிலேயே குட்டை ஏற்படுத்தப்பட்டு அதில் விடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு செய்வதால் அந்தக் கழிவுகள் நிலத்தில் பரவி விளை நிலங்கள் தரிசாக மாறும். சுற்றுச்சூழல் பாதிக்கப்படும். நிலத்தடி நீர் மாசுபடும். இந்த நிலை தொடர்ந்தால் வளமான எங்களது பகுதி பாலைவனமாக மாறிவிடும். எங்கள் மண்ணையும், மண்ணின் பசுமையையும் மீட்டெடுக்க விரும்புகிறோம். ஓஎன்ஜிசி நிறுவனம் உடனே பணிகளை நிறுத்திவிட்டு செல்ல வேண்டும். இல்லை என்றால் இப்பகுதியை சேர்ந்த 20 கிராம மக்கள், ஓஎன்ஜிசி நிறுவன கச்சா எண்ணை ஆய்வு செய்யுமிடத்தை முற்றுகையிட்டு தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்” என்றனர்.
சேத்தியாத்தோப்பு அருகே வெய்யலூர் கிராமத்தில் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் கச்சா எண்ணெய் ஆய்வுப்பணி நடக்கிறது.
கச்சா எண்ணெய் ஆய்வுப் பணியின்போது வெளியேற்றப்படும் கழிவுகள் அப்பகுதியிலேயே குட்டை ஏற்படுத்தப்பட்டு அதில் விடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு செய்வதால் அந்தக் கழிவுகள் நிலத்தில் பரவி விளை நிலங்கள் தரிசாக மாறும். சுற்றுச்சூழல் பாதிக்கப்படும். நிலத்தடி நீர் மாசுபடும்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.