நிலவழிகாட்டு மதிப்பை குறைத்த பின், ஒரே நாளில் 15,000 பத்திரங்கள் பதிவு.


நிலங்களின் வழிகாட்டு மதிப்பை 33 சதவீதமாக குறைத்த பிறகு, ஒரே நாளில் 15 ஆயிரம் பத்திரங்கள் பதிவாகியுள்ளதால் அரசுக்கு 70 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக வணிக வரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்துள்ளார்.
பத்திரப் பதிவு கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ள நிலை குறித்து தமிழக சட்டப்பேரவையில் இன்று கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதில் பேசிய காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணி, நிலங்களுக்கான வழிகாட்டு மதிப்பு 33 சதவீதம் குறைக்கப்பட்டுள்ள போதிலும், பத்திர பதிவு தொகை 3 முதல் 4 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும், அதைக் குறைக்குமாறும் கோரிக்கை விடுத்தார்.
இதற்கு பதலளித்த வணிகவரித்துறை அமைச்சர் கே.சி. வீரமணி, 33 சதவீதம் வழிகாட்டு மதிப்பு குறைக்கப்பட்டதால், அரசுக்கு 500 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறினார். இருப்பினும், எதிர்பார்த்தபடி, ஒரே நாளில் 15 ஆயிரம் பத்திரங்கள் வரை பதிவாகி அரசுக்கு 70 கோடி ரூபாய் வருவாய் கிடைத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.
பத்திரவுப் பதிவுக்கான தொகை 3 லிருந்து 4 சதவீதமாக உயர்த்தப்பட்டது தற்காலிகமானதுதான் என்ற அவர், பத்திரங்களின் எண்ணைக்கையும், அதனால் அரசுக்கு வருவாயும் அதிகரிக்கும்போது, பதிவுத் தொகை சதவீதம் குறைக்கப்படும் என்று குறிப்பிட்டார்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.