பண பேர விவகாரம்: ஆதாரம் இருந்தும் சட்டப்பேரவையில் பேச அனுமதி மறுப்பு; ஸ்டாலின் குற்றச்சாட்டு.


எம்எல்ஏ.,க்கள் பண பேர விவகாரம் தொடர்பாக வீடியோ ஆதாரத்தை கொண்டு வந்தும் அதுகுறித்து பேச அனுமதி மறுக்கப்பட்டதாக கண்டனம் தெரிவித்து சட்டப்பேரவையில் இருந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 14-ம் தேதி தொடங்கியது. கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் இன்று (வெள்ளிக்கிழமை) .
சட்டப் பேரவை கூட்டத் தொடர் தொடங்கிய நாள்முதல் பண பேரம் வீடியோ தொடர்பாக சட்டப் பேரவையில் பேச அனுமதி கோரி திமுக உறுப்பினர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இக்கோரிக்கைக்கு சபாநாயகர் தொடர்ந்து அனுமதி அளிக்க மறுத்து வருவாதல் தொடர்ந்து மூன்றவாது நாளாக திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
இன்று அவையில் இருந்து வெளிநடப்பு செய்தபின்னர் எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறுகையில், "பண பேர வீடியோ தொடர்பாக பேச இன்றும் சபாநாயகர் அனுமதி அளிக்க மறுத்துவிட்டார். சபாநாயகர் கூறியபடி வீடியோ ஆதாரத்தை கொண்டு வந்தும் எங்களை பேச அனுமதிக்கவில்லை. எனவே சபாநாயகரின் செயலைக் கண்டித்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளோம்.
அதிமுக எம்எல்ஏக்கள் பற்றிய பண பேர வீடியோ காட்சி முற்றிலும் உண்மையானது. அதன் அடிப்படையிலேயே தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி நடைபெறுகிறது. இது தமிழகத்துக்கு மிகப் பெரிய அவமானம்" என்றார்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.