பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான ரேண்டம் எண் இன்று வெளியீடு.


17 அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகள், 10 அரசு பொறியியல் கல்லூரிகள், 3 அரசு உதவிபெறும் கல்லூரிகள் உட்பட மொத்தம் 523 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் பி.இ., பி.டெக். படிப்புகளில் ஏறத்தாழ 2 லட்சம் இடங்கள் ஒற்றைச்சாளர முறையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் பொது கலந்தாய்வு மூலமாக நிரப்பப்படுகின்றன.
இந்த ஆண்டு பொறியியல் படிப்புக்கு ஒரு லட்சத்து 41 ஆயிரத்து 77 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அவர்கள் அனைவருக்கும் இன்று ரேண்டம் எண் ஒதுக்கப்பட்டுள்ளது. உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் சுனில் பாலிவால் ரேண்டம் எண்களை வெளியிட்டார்.
ரேண்டம் எண் என்பது கணினி மூலம் ஆன்லைனில் ஒதுக்கீடு செய்யப்படும் 16 இலக்க எண் ஆகும். பொறியியல் படிப்புக்கு அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் விண்ணப்பிப்பதால் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கும்போது ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் ஒரே கட் ஆப் மதிப்பெண் பெறும் வாய்ப்புகள் மிகவும் அதிகம்.
அத்தகைய சூழலில், கலந்தாய்வின்போது யாருக்கு முன்னுரிமை அளிப்பது என்பதற்காக முதலில் கணித மதிப்பெண் பார்க்கப்படும். அதில் யார் அதிக மதிப்பெண் பெற்றிருக்கிறாரோ அவர் முதலில் கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவார்.
ஒருவேளை கணித மதிப்பெண் சமமாக இருந்தால் இயற்பியல் மதிப்பெண்ணும் அதுவும் சமமாக இருப்பின் மாணவர்களின் முக்கிய பாடமும் அதுவும் சமமாக இருந்தால் பிறந்த தேதியும் பார்க்கப்படும்.
எதிர்பாராவிதமாக பிறந்த தேதியும் ஒன்றுபோல் அமைந்தால், கடைசி வாய்ப்பாக ரேண்டம் எண் பார்க்கப்படும். அப்போது, யாருடைய ரேண்டம் எண்ணின் மதிப்பு குறைவாக இருக்கிறதோ அவர் கலந்தாய்வுக்கு முதலில் அழைக்கப்படுவார்.
ரேண்டம் எண் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், அதை அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைய தளத்தின் மூலமாக விண்ணப்ப எண்ணை குறிப்பிட்டு தெரிந்துகொள்ளலாம். வரும் 22ஆம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு, 26ஆம் தேதி கலந்தாய்வு தொடங்குகிறது.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.