கணவரின் நடத்தையில் சந்தேகப்பட்டு, 7 பேரை எரித்துக் கொன்ற பெண்.


கணவரின் நடத்தையில் சந்தேகப்பட்டு, ஒரே வீட்டை சேர்ந்த 7 பேரை எரித்துக் கொலை செய்த பெண்ணை, சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்ப இராமநாதபுரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கேரளாவை சேர்ந்த குஞ்சு முகம்மது, தனது மனைவி ஹசீனாவுக்கு பேய் பிடித்துள்ளதாக கருதி, ஏர்வாடி தர்காவுக்கு அழைத்துச் சென்றுள்ளார். இதற்காக, ஏர்வாடி மேற்கு வாசல் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளார்.
இந்நிலையில், பக்கத்து வீட்டை சேர்ந்த பரிஹானா பர்வீன் என்பவருடன், தனது கணவருக்கு கள்ளத்தொடர்பு இருப்பதாக சந்தேகித்த ஹசீனா, பரிஹானா பர்வீன் வீட்டுக்கு சென்று, வீட்டிலிருந்த அனைவர் மீதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார். இதில், பரிஹானா பர்வீன் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். இருவர் பலத்த காயமடைந்தனர். இது குறித்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட ஹசீனா, நிபந்தனை ஜாமினில் வெளியே வந்துள்ளார்.
ஆனால், இவர் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்ததால், உயர்நீதிமன்ற மதுரை கிளை பிடிவாரண்ட் பிறப்பித்தது. ஹசீனாவை கைது செய்த போலீசார், அவரை திருச்சி மகளிர் சிறையில் அடைத்தனர். இந்நிலையில், கடந்த ஓராண்டாக அவருக்கு மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரை விடுதலை செய்யவேண்டும் எனவும் கூறி, தாக்கல் செய்யப்பட்ட மனு, இராமநாதபுரம் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
மனுவை விசாரித்த நீதிபதி, இறந்தவர்கள் குடும்பத்துக்கு ஹசீனா தலா 25 ஆயிரம் ரூபாய், காயமடைந்தவர்களுக்கு தலா 12,500 ரூபாய் இழப்பீடாக வழங்க உத்தரவிட்டதுடன், ஹசீனாவை கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் அனுமதிக்கும்படி உத்தரவிட்டார்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.