வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு நிலை: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு.வங்கக் கடலில் தமிழக கடலோர பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக இடியுடன்கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மைய தென் மண்டலத் துறைத் தலைவர் எஸ்.பாகுலேயன் தம்பி கூறினார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை மேலும் கூறியதாவது:
வட ஆந்திர கடலோர பகுதியிலிருந்து, தென் தமிழக கடலோர பகுதி வரை நிலைகொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்துள்ளது. இதுபோல் வெப்பச் சலனம் காரணமாகவும் உள்மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் திண்டிவனம், வந்தவாசி, உத்திரமேரூரில் 70 மி.மீ., மரக்காணத்தில் 50 மி.மீ., காஞ்சிபுரம், அரக்கோணம், சென்னை விமான நிலையம் - 40 மி.மீ., வேலூரில் 27 மி.மீ., மதுரையில் 21 மி.மீ., திருத்தணியில் 20 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
தஞ்சாவூர், சென்னை நுங்கம்பாக்கம், நாகை, கடலூர், கொடைக்கானல், வால்பாறை, திருப்பத்தூர், பரங்கிப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்துள்ளது
காற்றழுத்தத் தாழ்வு நிலை தொடர்ந்து அதே இடத்தில் நிலைகொண்டுள்ளதால் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன்கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னையைப் பொருத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை நேரங்களில் லேசான அல்லது இடியுடன்கூடிய மழை பெய்யும் என்றார் அவர்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.