இருசக்கர வாகனங்களை திருடிய வழக்கு ,விசாரணைக்கு பின் லாரி முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை.


சென்னை ஆர்.கே.நகரில், இருசக்கர வாகனங்களை திருடிய வழக்கில் காவல் நிலையத்தில் விசாரணைக்கு சென்றுவிட்டு, திரும்புகையில் மினி லாரி முன் பாய்ந்து இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.
அத்திப்பட்டைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர், கொருக்குப்பேட்டை பகுதியில் இருசக்கர வாகனத்தை திருட முயற்சித்தபோது, அருகிலிருந்தவர்கள் விரட்டிப்பிடித்து ஆர்.கே. நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் மணிகண்டன் மீது மீஞ்சூர் பகுதியில் இருசக்கர வாகனங்களை திருடிய வழக்கு நிலுவையில் உள்ளது தெரியவந்துள்ளது.
இந்நிலையில், காவல் நிலையத்தில் ஆய்வாளர் இல்லாததால், இன்று மாலை விசாரணைக்கு ஆஜராக வரும்படி காவல் துறையினர் கூறியதையடுத்து, வெளியே வந்த மணிகண்டன் சாலையில் சென்றுகொண்டிருந்த மினி லாரியின் மீது பாய்ந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்துபோனார். இதையடுத்து, போலீஸார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.