ஜூலை 17ல் குடியரசுத் தலைவர் தேர்தல்: தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு.


குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை 17ல் நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி அறிவித்துள்ளார். 
இதுதொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’வேட்புமனுத் தாக்கல் ஜூன் 14ம் தேதி தொடங்குகிறது. வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாள் ஜூன் 28ம் தேதி. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை ஜூன் 29ம் தேதி நடைபெறும். வேட்புமனுக்களைத் திரும்பப் பெற கடைசி நாள் ஜூலை 1ம் தேதி. குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தல் ஜூலை 17ல் நடைபெறும். வாக்கு எண்ணிக்கை ஜூலை 20ல் நடைபெறும். தேர்தல் நடைமுறைகள் ஜூலை 24ம் தேதியுடன் முடிவடையும் ‘ என்று அவர் அறித்துள்ளார். குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் ஜூலை 24ல் முடிவடைவதை ஒட்டி, புதிய குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைமுறைகளை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.