குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட 6 பேர் மனுத்தாக்கல்.


குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதற்காக தமிழகத்தைச் சேர்ந்தவர் உள்பட 6 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். குடியரசுத் தலைவர் தேர்தல் அடுத்த மாதம் 17ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பாளர்களைத் தேர்வு செய்வதில் பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் தீவிரமாக உள்ளன.
இந்நிலையில், தேர்தல் மன்னன் என்று அழைக்கப்படும் சேலத்தைச் சேர்ந்த பத்மராஜன், மும்பையைச் சேர்ந்த மொகமத் பட்டேல் – சாயிரா பானு தம்பதி உள்பட 6 பேர் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
இவர்களில் 4 பேர் மட்டுமே போட்டியிடுவதற்கான 15 ஆயிரம் ரூபாய் டெபாசிட்டை செலுத்தியுள்ளனர். குடியரசுத்தலைவர் தேர்தலில் வாக்களிக்கும் உரிமையுள்ள எம்.எல்.ஏ.கள் மற்றும் எம்.பி.களில் 50 பேரின் முன்மொழிவும், 50 பேரின் வழிமொழிவும் இருந்தால் மட்டுமே இந்த மனுக்கள் ஏற்கப்படும்.
ஆனால், மனுத்தாக்கல் செய்த யாரும் தேவையான அளவு முன்மொழிவுகளைப் பெறாததால், 6 பேரின் மனுக்களும் நிராகரிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.