கொள்ளை போன நகைகளை தங்கக்கட்டிகளாக மீட்ட புதுச்சேரி போலீசார்.


புதுச்சேரியில் வங்கி மேலாளர் வீட்டில் திருடப்பட்டவை உள்ளிட்ட 63 சவரன் நகைகளை, தங்கக்கட்டிகளாக போலீசார் மீட்டனர்.
லாஸ்பேட்டை குறிஞ்சி நகரில் ஜெயசீலன் என்ற வங்கி மேலாளரின் வீட்டில் கடந்த மாதம் 90 சவரன் நகைகள் திருடு போயின. இதுகுறித்து விசாரணையில், ஜெயசீலனின் மகனின் நண்பரான திலீப்குமார், அவரது நண்பர்கள் விக்னேஷ், ஆறுமுகம், ராம்ஜி, அஜய்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் 30 சவரன் நகைகள், இரண்டே கால் லட்சம் ரூபாய் பணம், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மீட்கப்படாத நகை, பணத்தை பறிமுதல் செய்ய, விக்னேஷ், ஆறுமுகம் இருவரையும் காவலில் எடுத்து விசாரித்த போலீசார், ஆறுமுகத்தின் சித்தப்பாவின் அடகுக்கடையில் சோதனை நடத்தினர். அங்கு, நகைகள் உருக்கப்பட்டு தங்கக் கட்டியாக மாற்றியிருப்பதை அறிந்த போலீசார், 63 சவரன் எடை கொண்ட தங்கக்கட்டியை பறிமுதல் செய்தனர்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.