ஆந்திரா, மேற்குவங்கம் உத்தரகாண்ட் மாநிலங்களில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை-பரபரப்பு புகார்.


ஆந்திரா, தெலுங்கானா, மேற்கு வங்கம் மற்றும் உத்தராகண்ட் மாநிலங்களில் பிளாஸ்டிக் அரிசி, பிளாஸ்டிக் சர்க்கரை போன்றவை விற்பனை செய்யப்படுவதாக வெளியாகியுள்ள தகவலால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சீனாவில் பிளாஸ்டிக் அரிசி, பிளாஸ்டிக் முட்டை ஆகியவை தயாரிக்கப்பட்டு, இந்தியாவிற்குள் கள்ளத்தனமாக விற்பனை செய்யப்படுவதாக சமூக வலைதளங்களில் தகவல்களும், அது தொடர்பான வீடியோக்களும் வைரலாக பரவி வருகின்றன. இந்த நிலையில், உத்தரகாண்ட் மாநிலம் ஹல்த்வானி சந்தையில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்யப்படுவதாக வெளியாகியுள்ள தகவல், பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹல்த்வானி சந்தையில் வாங்கிய அரிசியை சமைத்து சாப்பிட்டபோது, அதன் ருசியில் மாற்றம் தெரிந்ததாக கூறி ஒருவர், போலீசில் புகார் அளித்துள்ளார். மேலும் இந்த அரிசியில் சமைத்த சாதத்தை உருண்டையாக்கி, இளைஞர் ஒருவர் தரையில் தட்டும்போது, அது பந்துபோல எழுகிறது. பிளாஸ்டிக் அரிசி என்று கூறப்படும் அரிசியில் தயாரித்த சாதத்தில் செய்யப்பட்ட உருண்டைகளை சிறுவர்களும் பந்து போல் பயன்படுத்தி விளையாடி வருகின்றனர்.
தெலுங்கானா மாநிலம் சரூர்நகரில் ஓட்டல் ஒன்றில் வாங்கிய பிரியாணி, பிளாஸ்டிக் அரிசியால் செய்யப்பட்டதாக கூறி, கடை உரிமையாளரை பொதுமக்கள் சிலர் அடித்து உதைத்தனர். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், ஆந்திர மாநிலத்தில் பரவலாக பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்யப்படுவதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவி வருகிறது. இதனால், பொதுமக்கள் கடும் அச்சத்திற்கு உள்ளாகியுள்ளனர். இதனிடையே, மேற்கு வங்க மாநிலம் சிலுகுரியில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்யப்படுவதாகவும், அந்த அரிசி மூலம் செய்யப்பட்ட சாதம் பந்துபோல் குதிப்பதாகவும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இதனால், கடும் அச்சம் ஏற்பட்டுள்ள நிலையில், அதைப் போக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூரில் வாங்கிய சர்க்கரையில் பிளாஸ்டிக் போன்ற உருளைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுடுநீரில் சர்க்கரையை போட்டதும், அந்த பிளாஸ்டிக் உருளைகள் ஜவ்வரிசி போல காட்சியளிக்கிறது. இது தொடர்பான புகாரில், சர்க்கரை விற்கப்பட்ட கடையில் ஆய்வு செய்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், ஆய்வுக்காக அவற்றை எடுத்துச் சென்றுள்ளனர்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.