நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை இன்று முதல் தினசரி மாறுகிறது.


பெட்ரோல், டீசல் விலையை தினசரி நிர்ணயிக்கும் முறை இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 1 ரூபாய் 12 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 1 ரூபாய் 24 காசுகளும் குறைக்கப்பட்டுள்ளன.
பெட்ரோல், டீசல் விலையை 15 நாட்களுக்கு ஒருமுறை மாற்றி வந்த எண்ணெய் நிறுவனங்கள், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் நாள் தோறும் விலை மாற்றத்தை சந்தித்து வருவதால், பெட்ரோல், டீசல் விலையையும் தினசரி மாற்றம் செய்ய மத்திய அரசிடம் அனுமதி கோரின.
இதற்கு மத்திய அரசும் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, புதுச்சேரி, விசாகப்பட்டினம் உள்பட 5 நகரங்களில் கடந்த மாதம் சோதனை முயற்சியாக இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டது. இதற்கு வெற்றி கிடைத்ததை தொடர்ந்து, நாடு முழுவதும் இன்று முதல் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை மாற்றும் நடவடிக்கையை எண்ணெய் நிறுவனங்கள் அமலுக்கு கொண்டு வந்துள்ளன.
அதன்படி, இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 1 ரூபாய் 12 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 1 ரூபாய் 24 காசுகளும் குறைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில்,தினந்தோறும் நிர்ணயிக்கப்படும் பெட்ரோல்-டீசல் விலையை வாடிக்கையாளர்கள் தெரிந்துகொள்ள Fuel@IOC என்ற மொபைல் ஆப்-ஐ இந்தியன் ஆயில் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
அதில் பெட்ரோல்-டீசல் விலை மாற்றம் நகரம் வாரியாக இருப்பதாகவும், பெட்ரோல் பங்க்-குகளில் வைக்கப்பட்டிருக்கும் பெரிய LED திரைகளில் பார்த்து விலையை தெரிந்துகொள்ளலாம் என்றும் இந்தியன் ஆயில் நிறுவனம் கூறியுள்ளது. மேலும், செல்போனில் RSP என டைப் செய்து ஒரு SPACE விட்டு அருகில் உள்ள பெட்ரோல் பங்கின் CODE-ஐ டைப் செய்து 92249-92249 என்ற எண்ணுக்கு எஸ் எம் எஸ் அனுப்பினால் அன்றைய பெட்ரோல்-டீசல் விலை தெரியவரும் என்றும் இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.