கூச்சல் குழப்பத்திற்கு இடையே தாக்கலானது ஜிஎஸ்டி மசோதா.


தமிழக சட்டப்பேரவையில் ஜிஎஸ்டி மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
பேரவை காலை தொடங்கியதிலிருந்தே, எம்எல்ஏ சரவணன் குறித்த வீடியோ சர்ச்சை விவகாரத்தை எழுப்பி திமுக உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும், திமுக-வினரின் கூச்சல் குழப்பத்திற்கு இடையே பேரவையில் ஜிஎஸ்டி மசோதாவை வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி தாக்கல் செய்தார். இதனிடைய திமுக எம்எல்ஏ-க்கள் அமளியை தொடர்ந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் தனபால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாடு முழுவதும் ஒரே வரியை நிர்ணயிப்பது தொடர்பான சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டு சட்டமாக நிறைவேற்றப்பட்டது. வரும் ஜூலை 1-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்படவுள்ளது. இந்நிலையில் இன்று இந்த மசோதாவை தமிழக சட்டப்பேரவையிலும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.