31 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-38 ராக்கெட்.


பி.எஸ்.எல்.வி. சி-38 ராக்கெட், கார்டோசாட்-2 உள்ளிட்ட 31 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.காலை 9.29 மணிக்கு, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சத்தீஸ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பிஎஸ்எல்வி சி-38 ராக்கெட், 31 செயற்கைக் கோள்களுடன் விண்ணில் ஏவப்பட்டது.
கார்ட்டோசாட் 2 வரிசை செயற்கைக் கோள் மற்றும் 30 நானோ செயற்கைக் கோள்களை பிஎஸ்எல்வி சி-38 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இதில், 712 கிலோ எடை கொண்ட கார்ட்டோசாட் 2 வரிசை செயற்கைக்கோள், புவியின் மேற்பரப்பை கண்காணித்து சுற்றுச்சூழல், மற்றும் இயற்கை வளங்கள் தொடர்பான தகவல்களை வழங்கும்.
எல்லைப் பகுதியில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்துவதற்கு தேவையான துல்லியமான தகவல்கள், அண்டை நாடுகளில் எல்லைகளில் டாங்குகள் உள்ளிட்டவற்றின் நடமாட்டம் போன்ற தகவல்களை அறியவும் கார்ட்டோசாட் 2 வரிசை செயற்கைக்கோள் உதவும்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நூருல் இஸ்லாம் பல்கலைக்கழகத்தின் என்.ஐ.யூ.சாட் என்ற செயற்கைக்கோளையும் பிஎஸ்எல்வி சி38 ராக்கெட் விண்ணில் செலுத்தியது. பயிர்க் கண்காணிப்பு, பேரிடர் மேலாண்மை தொடர்பான தகவல்களை இந்த என்.ஐ.யூ.சாட் வழங்கும்.
அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட 14 நாடுகளைச் சேர்ந்த 29 நானோ செயற்கைக்கோள்களையும் பிஎஸ்எல்வி ராக்கெட் விண்ணில் செலுத்தியுள்ளது. 31 செயற்கைக் கோள்களின் மொத்த எடை 955 கிலோவாகும். 44 மீட்டர் உயரமும், 320 டன் எடையும் கொண்ட பிஎஸ்எல்வி ராக்கெட், 40ஆவது முறையாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.