2024 - 2028 ஒலிம்பிக் போட்டி நடத்தும் நாடு எது?


2024 மற்றும் 2028 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டியை எந்த நாடு நடத்தும் என்ற அறிவிப்பை ஒரே சமயத்தில் வெளியிட சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி முடிவு செய்துள்ளது.
பாரிஸ் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் ஆகிய நகரங்களில் ஒன்று 2024 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்தும் உரிமையைப் பெறும் என்று கூறப்படுகிறது. செப்டம்பர் மாதத்தில் இந்த அறிவிப்பு வெளியாகும் என்று ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் (Thomas Bach) தாமஸ் பக் தெரிவித்துள்ளார். இந்த முடிவை பாரிஸ் ஒலிம்பிக் கமிட்டி வரவேற்றுள்ளது. இதனிடையே பளுதூக்கும் போட்டியில் ஊக்கமருந்து உபயோகத்தை தடுப்பது தொடர்பான திருப்தியான அறிக்கையை சர்வதேச பளுதூக்கும் கூட்டமைப்பு இந்த ஆண்டு இறுதிக்குள் சமர்ப்பிக்காவிட்டால் 2024 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் இருந்து பளுதூக்கும் போட்டி நீக்கப்படும் என்றும் தாமஸ் பக் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.