போர்க்கப்பல்களை தாக்கும் திறன் படைத்த அதிநவீன ஏவுகணை சோதனையை மீண்டும் நடத்தியது வடகொரியா.


வடகொரியா மீண்டும் புதிய வகையான ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தி முடித்தது. எதிரிகளின் போர்க் கப்பல்களைத் தகர்க்கும் வகையில் இந்த ஏவுகணை உருவாக்கப்பட்டிருப்பதாக கூறப் படுகிறது.
அமெரிக்கா, தென்கொரியா மற்றும் சர்வதேச நாடுகளின் எச்சரிக்கையை மீறி வடகொரியா தொடர்ந்து அணு ஆயுதங்கள் மற்றும் நவீன ஏவுகணை சோதனை களில் ஈடுபட்டு வருகிறது. இதனால் வடகொரியா மீது போர் தொடுக்கப் போவதாக அமெரிக்கா மிரட்டி வருகிறது.
மேலும் தென்கொரியா கடல் பகுதிகளில் கார்ல் வின்சன், ரோனால்டு ரீகன் போன்ற போர்க் கப்பல்களையும், 6,900 டன் எடை கொண்ட நீர்மூழ்கிக் கப்பலையும் அமெரிக்கா நிறுத்தி வைத்துள்ளது. இதன் காரணமாக கொரிய தீபகற்பத்தில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இந்நிலையில் வடகொரியா கடந்த வியாழக்கிழமை அன்று மீண்டும் புதிய வகையான ஏவுகணை சோதனையில் ஈடுபட்டது. தரையில் இருந்து கடலில் உள்ள போர்க் கப்பல்களைத் தாக்கும் வகையில் உருவாக்கப்பட்ட அந்த ஏவுகணை, அந்நாட்டின் கிழக்கு கடலோரப் பகுதியில் சோதித்து பார்க்கப்பட்டது.
அப்போது கடலில் நிறுத்தப்பட்டிருந்த மாதிரி இலக்கை அந்த ஏவுகணை வெற்றிகரமாக தாக்கி அழித்ததாக கூறப்படுகிறது. வடகொரியாவின் இந்நடவடிக்கை அமெரிக்கா மற்றும் தென் கொரியாவை மீண்டும் எரிச்சலடைய வைத்துள்ளது.
Labels:

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.