பயிர் விளைச்சல் போட்டிகள் – நெல்லை மாவட்ட ஆட்சியர் அழைப்பு.


திருநெல்வேலி மாவட்டத்தில் பருவ மழையை எதிர்பார்த்து தற்போது நெல் சாகுபடி செய்வதற்கான பணிகள் நடைபெற தொடங்கியுள்ளன. இந்நிலையில், வேளாண் துறை பரிந்துரைக்கும் அனைத்து வழிமுறைகளையும் பயன்படுத்தி, விவசாயிகள் அதிக மகசூல் ஈட்டவேண்டும் என வலியுறுத்தியுள்ள ஆட்சியர் சந்தீப் நந்தூரி, போட்டியில் பங்கேற்று பரிசுகளை வெல்லும் வழிமுறைகளை வெளியிட்டுள்ளார்.
விவசாயிகள் அனைவரும் மாநில மற்றும் மாவட்ட அளவிலான பயிர் விளைச்சல் போட்டியில் பங்கேற்க முடியும். இவர்கள், நெல் பயிருக்கான மாநில பதிவுக் கட்டணமாக 100 ரூபாயும், மாவட்ட அளவில் எனில் 50 ரூபாயும் செலுத்தவேண்டும். மக்காச்சோளம், உளுந்து ஆகிய பயிர்களுக்கும் இதேபோன்று தனித்தனியாக போட்டிகள் நடைபெறும். போட்டியில், நில உரிமையாளர்களும், குத்தகைதாரர்களும் கலந்து கொள்ளலாம். 50 சென்ட் அளவில் வேளாண் அதிகாரிகளின் முன்னிலையில் அறுவடை செய்யப்பட்டு, மகசூல் கணக்கிடப்படும்.
நெல் பயிருக்கு மாநில அளவில் முதல் பரிசாக 25 ஆயிரம் ரூபாயும், இரண்டாம் பரிசாக 15 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும். மக்காச்சோளம் மற்றும் உளுந்து பயிர்களுக்கு முதல் பரிசாக 15 ஆயிரம் ரூபாயும், இரண்டாம் பரிசாக 10 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும். வட்டார வேளாண்மை அதிகாரிகளை அணுகி விவசாயிகள் போட்டியில் பங்கேற்கலாம்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.