நாமக்கல் மோகனூரில் செயல்பட்டு வரும் மணல் குவாரிகளை மூடக் கோரிக்கை.


நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே, மீண்டும் செயல்பட ஆரம்பித்த அரசு மணல் குவாரி பணிகளை அதிரடியாக தடுத்து நிறுத்திய ஊர் பொதுமக்கள், அவர்களை கலைக்க முயன்ற காவல்துறையினரையும் வருவாய்துறையினரையும் விரட்டி அடித்தனர்.
நாமக்கல் மாவட்டம் மோகனூர், குமரிபாளையம் மற்றும் ஒருவந்தூர் ஆகிய இடங்களில் காவிரி ஆற்றுப் படுகையில் அரசு சார்பில் மணல் அள்ளப்பட்டு வந்தது. சேகர் ரெட்டி விவகாரத்துக்கு பிறகு மூடப்பட்ட இந்த மணல் குவாரிகளை மீண்டு திறக்க அரசு முடிவு செய்து, முதற்கட்டமாக ஒருவந்தூர் மணல் குவாரியில் மணல் அள்ளும் பணிகள் நடைபெற ஆரம்பித்தன. இதற்கு பொதுமக்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். பொதுமக்களின் எதிர்ப்பை தொடர்ந்து, நாமக்கல் வருவாய் கோட்டாச்சியர் முன்னிலையில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுடன் இன்று சமரச பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது, மணல் குவாரியை மூடவேண்டும் என்பதில் பொதுமக்கள் உறுதியாக இருந்ததால், பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
இந்நிலையில், ஒருவந்தூரில் தொடர்ந்து மணல் அள்ளப்படுவதை அறிந்த பொதுமக்கள், குவாரிக்கு சென்று ஜேசிபி இயந்திரங்களை தடுத்து, மணல் அள்ளும் பணிகளை நிறுத்தினர். இவர்களை தடுக்க முயன்ற காவல்துறையினரையும் வருவாய்துறை அதிகாரிகளையும் பொதுமக்கள் விரட்டியடித்தனர்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.