தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மழை.


சென்னையில் எழும்பூர், மாம்பலம், ஈக்காட்டுதாங்கல், மதுரவாயல் உள்ளிட்ட இடங்களிலும், புறநகர்ப் பகுதிகளான தாம்பரம், திருவொற்றியூர், தண்டையார்பேட்டை பகுதிகளிலும் மழை பெய்தது. கருமேகங்கள் சூழ்ந்து குளிர்க்காற்று வீசியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு சுற்றுவட்டாரத்தில் ஒருமணிநேரத்துக்கும் மேலாக பலத்த மழை பெய்ததால் சாலையில் தண்ணீர் தேங்கியது.
தஞ்சை மாவட்டம் திருவையாறு, வல்லம், சூரக்கோட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. பெரம்பலூரில் துறைமங்கலம், நான்குரோடு, குன்னம், வாலிகண்டபுரம், உள்ளிட்ட இடங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்தது.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர், பொத்தனூர், பாண்டமங்கலம் ஆகிய இடங்களில் பலத்த மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர். நாகை மாவட்டம் சீர்காழி, கொள்ளிடம், பூம்புகார் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திடீரென பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.