மாராவி நகரின் பெரும்பாலான பகுதிகளை மீட்டது பிலிப்பைன்ஸ் ராணுவம்.


பிலிப்பைன்ஸ் நாட்டில் தீவிரவாதிகள் ஆக்கிரமித்திருந்த மாராவி நகரின் பெரும்பாலான பகுதிகளை கைப்பற்றி விட்டதாக ராணுவம் அறிவித்துள்ளது. ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடைய தீவிரவாதக் குழுவினர் கடந்த மே மாதம் 23-ம் தேதி மாராவி நகரை கைப்பற்றினர்.
மசூதிகள், பள்ளிகளை ஆக்கிரமித்துள்ளதோடு, பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகளை ஈவு இரக்கமின்றி கொலை செய்து வருகின்றனர். அவர்களிடமிருந்து மக்களை மீட்டு, நகரைக் காக்க ராணுவம் துப்பாக்கிச் சண்டை நடத்தி வருகிறது. இதனால் இதுவரை பொதுமக்கள் உள்ளிட்ட 369 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில், மாராவி நகரை சுற்றி வளைத்து கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளதாக பிலிப்பைன்ஸ் ராணுவம் தெரிவித்துள்ளது. தீவிரவாதக் குழுக்கள் கட்டுப்பாட்டில் வெறும் ஒரு சதுர கிலோமீட்டர் பரப்பு மட்டுமே எஞ்சியுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Labels:

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.