2 மாதங்களுக்குப் பின் கடலுக்கு சென்ற மீனவர்களுக்கு அதிக இறால் மீன்கள்: மீனவர்கள் மகிழ்ச்சி


மீன்பிடி தடைக்காலம் முடிந்து கடலுக்கு சென்ற ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் அதி களவில் இறால் மீன்கள் கிடைத்ததால் மகிழ்ச்சி அடை ந்துள்ளனர்.
மீன்களின் இனப்பெருக்க காலத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் ஏப். 15-ம் தேதி முதல் 45 நாட்களுக்கு விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல அரசு தடை விதிக்கும். இந்த ஆண்டு அதிகபட்சமாக 61 நாட்கள் தடை விதிக்கப்பட்டது.
தடைக் காலத்தில் மீனவர்கள் தங்கள் படகுகள், வலைகளை சீரமைக்கும் பணியில் ஈடு பட்டிருந்தனர். தொழில் பாதிப்பு காரணமாக கடந்த இரு மாதங்களாக மீன் வகைகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால், மீன்களின் விலையும் இரு மடங்கு உயர்ந்தது.
மீன்பிடி தடைக்காலம் ஜூன் 14-ம் தேதி நள்ளிரவு 12 மணியுடன் முடிவடைந்தது. ஆனால் மீன்பிடித் தடைக்காலம் முடிவடைவதற்கு முன்னரே மீன்வளத் துறை அலுவலகத்தில் டோக்கன்கள் பெறாமல் ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் புதன்கிழமை மதியமும், புதன்கிழமை இரவு பாம்பன், மண்டபம், தேவிப்பட்டினம், தொண்டி, எஸ்.பி.பட்டினம், கீழக் கரை, ஏர்வாடி, வாலிநோக்கம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஏழாயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் 1,500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் கடலுக்குச் சென்றனர்.

அதிகளவில் கிடைத்த இறால் மீன்களை தரம் பிரிக்கும் மீனவர்கள்.

டோக்கன் பெறவில்லை
டோக்கன்கள் பெறாமல் 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு சென்றது மீன் வளத்துறை அதிகாரிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இது குறித்து ராமநாதபுரம் ஆட்சியர் ச.நடராஜனிடம் மீனவர்கள் குறித்து புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீனவர்களின் உரிமம் ரத்து?
இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு மீன்வளத் துறையின் அனுமதி பெறாமல் சென்ற படகுகளுக்கு டீசல் மானியம் ரத்து செய்யப்பட்டதோடு, மீன்பிடி உரிமமும் ரத்து செய்யப்பட்டது. இந்த ஆண்டும் மீனவர்கள் மீதான இதே நடவடிக்கை தொடரும் என மீன்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மதிப்பு சுமார் ரூ.6 கோடி
கடந்த இரண்டு மாதங்களுக்கு பின்னர் கடலுக்குச் சென்ற விசைப்படகு மீனவர்கள் அதிக இறால் மீன்கள் கிடைத்தால் மகிழ்ச்சியுடன் மீனவர்கள் வியாழக்கிழமை காலை மகிழ்ச்சியுடன் கரை திரும்பினர்.
ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்குச் சென்றன. இதில் ஒரு படகுக்கு சராசரியாக 100 கிலோ முதல் 150 கிலோ வரையிலும் இறால் மீன்கள் வீதம் 75 டன்கள் வரையிலும் கொள்முதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு சுமார் ரூ.6 கோடி ஆகும்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.