குறுவை சாகுபடிக்காக நாளை தண்ணீர் திறப்பு இல்லை.


மேட்டூர் அணையில் இந்த ஆண்டும் குறைந்த அளவிலே தண்ணீர் இருப்பதன் காரணமாக குறுவை சாகுபாடிக்காக நாளை தண்ணீர் திறக்க வாய்ப்பில்லாததால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
மேட்டூர் அணையின் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, தஞ்சை, திருவாரூர்,நாகப்பட்டினம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் 16 லட்சத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் பாசன வசதி பெறுகின்றன.அணையின் நீர் மட்டம் 90 அடியாக இருந்தால் குறுவை,சம்பா மற்றும் தாளடி பயிர்களுக்கு ஜூன் 12ந் தேதி தண்ணீர் திறக்கப்படும். நேற்றைய நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 23 புள்ளி 68 அடியாக இருப்பதால் நடப்பாண்டிலும் குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறக்க வாய்ப்பில்லை. மேட்டூர் அணையின் 83 ஆண்டு கால வரலாற்றில் 16 ஆண்டுகள் மட்டுமே குறிப்பிட்ட நாளான ஜூன் 12ந் தேதி பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.