மகாராஷ்டிர மாநிலத்தில் விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை வெடித்தது.


மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தில் விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. மோதலில் போலீஸார் பலர் காயமடைந்துள்ளனர்.
தானே அருகே, பிரிட்டிஷார் ஆட்சிக் காலத்தில் விமான நிலையம் அமைந்திருந்த, 12ஆயிரத்து 600 ஏக்கர் நிலம் தற்போது பாதுகாப்புத்துறைக்கு சொந்தமாக உள்ளது. ஆனால் இந்த நிலம் காலப்போக்கில் மெல்ல மெல்ல ஆக்கிரமிக்கப்பட்டு அதில் ஏராளமானோர் விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில், அந்த நிலத்தை கையகப்படுத்தும் வகையில் பாதுகாப்புத் துறை சுற்றுச்சுவர் எழுப்பி வருவதாகக் கூறப்படுகிறது.
இதை எதிர்த்தும் நிலத்தை தங்களுக்கே வழங்க வேண்டும் என்று கோரியும் 17 கிராமங்களை சேர்ந்தவர்கள் தானே-பட்லாப்பூர் நெடுஞ்சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மொத்தம் 10 இடங்களில் நடைபெற்ற இந்த போராட்டம் வன்முறையாக மாறியதை அடுத்து வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. கட்டுப்படுத்த முயன்ற போலீஸாருடனும் ஆர்ப்பாட்டக்காரர்கள் மோதலில் ஈடுபட்டனர். இதில் காவலர்கள் பலர் காயமடைந்துள்ளனர்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.