விவசாயிகள் போராட்டத்தைக் கலைக்க காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 விவசாயிகள் பலி.


மத்தியப்பிரதேச மாநிலத்தில் விவசாயிகள் போராட்டத்தின் போது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது.வெங்காயம், பருப்பு உள்ளிட்ட விளை பொருட்களுக்கான கொள்முதல் விலையை அதிகரித்து வழங்க வலியுறுத்தி கடந்த சில நாட்களாக அம்மாநிலத்தில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இன்று மாண்ட்சாரில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போது, அவர்களை கலைந்து செல்லுமாறு போலீசார் வற்புறுத்தினர். விவசாயிகள் கலைந்து செல்லாததால் அவர்களை நோக்கி போலீசார் துப்பாக்கியால் சுட்டனர். இதில் இரண்டு விவசாயிகள் குண்டடி பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துடன், 4 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது. துப்பாக்கிச்சூடு காரணமாக போராட்டம் தீவிரமடையும் சூழல் நிலவுவதால் உஜ்ஜயின், ரட்லம் உள்ளிட்ட பகுதிகளில் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளதுடன் பதற்றம் நிறைந்த இடங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே துப்பாக்கிச் சூட்டை நடத்தியது காவல்துறை அல்ல என்று கூறியுள்ள அம்மாநில அரசு, இதுகுறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிடப்படும் என்று தெரிவித்துள்ளது.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.