மதுரை, தூத்துக்குடியில் மோசமான வானிலை,காரணமாக விமான சேவை பாதிப்பு.


காஞ்சிபுரம், கடலூர், நெல்லை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் மாலை மிதமானது முதல் கனமழைவரை பெய்தது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் செங்கல்பட்டு, சிங்கபெருமாள் கோவில், மறைமலைநகர், கூடுவாஞ்சேரி பகுதிகளில் மழை பெய்தது.
கடலூர் மாவட்டத்தில், கடலூர், ரெட்டிச்சாவடி, நெல்லிக்குப்பம், புதுப்பேட்டை, ஆலப்பாக்கம்,சேத்தியாத்தோப்பு உள்ளிட்ட பல பகுதிகள் இடி மின்னலுடன் மழை பெய்தது.
மதுரையில், ஆரம்பத்தில் லேசாக பெய்த மழை, பின்னர் கன மழையாக மாறியது. இந்நிலையில், சென்னையிலிருந்து தூத்துக்குடி நோக்கிச் சென்ற விமானம், தூத்துக்குடியில் மோசமான வானிலை என கூறப்பட்டதால், மதுரையில் தரையிறக்கப்பட்டது.
பின்னர், காலநிலை சாதகமாக இருப்பதாக தகவல் வந்ததை அடுத்து, அந்த விமானம் தூத்துக்குடி சென்றடைந்தது. இதேபோல், சென்னையில் இருந்து மதுரை நோக்கிச் சென்ற விமானம், மதுரையின் வானிலை கருதி, திருச்சியில் தரையிறக்கப்பட்டது. பின்னர் மதுரையில் மழை குறைந்ததாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அந்த விமானம் மதுரை புறப்பட்டு சென்றது.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.