கட்சிக்கு யார்தான் தலைவர்? பதில் அளிக்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்.


அதிமுக அம்மா அணிக்கு யார்தான் தலைவர் என்ற கேள்விக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார்.
அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளர் தினகரன், பொதுச் செயலாளர் சசிகலாவை ஒதுக்கி வைப்பது என்று முடிவெடுத்துள்ளதாக அமைச்சர்கள் கூறி வரும் நிலையில், கட்சிக்கு யார்தான் தலைவர் என்ற கேள்விக்கு வழிகாட்டு குழுவின் வழிகாட்டுதல் படி கட்சி நடத்தப்படுகிறது என்று நிதியமைச்சர் ஜெயகுமார் பதிலளித்தார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி 8 மாவட்ட எம்.எல்.ஏ.க்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். சட்டசபை கூட்டம் நடைபெறவிருக்கும் நிலையில் இந்த எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்துள்ளது.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், 8 மாவட்ட எம்.எல்.ஏ.க்களை முதல்வர் சந்தித்து தொகுதிப் பிரச்னைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் நடக்கவிருக்கும் பேரவைக் கூட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. 2021 ஆம் ஆண்டு வரை அம்மாவின் ஆட்சி தொடரும், 2021க்குப் பிறகும் அம்மா ஆட்சியே தொடரும் என்றார்.
டிடிவி தினகரனை எம்.எல்.ஏ.க்கள் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருவது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, தினகரனை எம்.எல்.ஏ.க்கள் தனிப்பட்ட முறையில் சந்திப்பதை அரசியல் ஆக்கக் கூடாது. தினகரனை சந்திப்பதால் ஆட்சியின் பெரும்பான்மைக்கு பாதிப்பு ஏற்படாது என்றும் கூறினார். 
அமைச்சர் ஜெயக்குமார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது குறித்து விரைவில் அறிவிப்பு வரும் என எம்எல்ஏ தங்கத்தமிழ்செல்வன் கூறியிருந்தார். அது பற்றிக் கேட்டதற்கு, அவர் சொல்வதை பொருட்படுத்த வேண்டாம் என்று பதிலளித்தார் ஜெயக்குமார்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.