லண்டன் தீ விபத்தில் 12 பேர் உயிரிழப்பு- 100க்கும் மேற்பட்டோரை காணவில்லை.


லண்டனில் தீப்பிடித்து எரிந்த கட்டடத்தில் பலியானோர் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும் என்று அஞ்சப்படுகிறது. லண்டனில் தீப்பிடித்த 24 மாடிக் கட்டடத்தின் தீயை அணைக்க 200க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் 40 வாகனங்களுடன் இரவு பகலாக போராடி தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. நேற்று மாலை முதல் மீண்டும் சிறிய அளவில் தீ எரிந்தது. இதனால் இரவு முழுவதும் விடிய விடிய தீயணைப்பு வீரர்கள் விழிப்புடன் இருந்தனர்.
இருந்த போதும் கடும் புகை மூட்டம் காரணமாகவும் கட்டடடம் இடிந்து விழும் நிலையில் இருப்பதாலும் மீட்புப் பணிகளில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. தீயில் சிக்கிய யாரும் இனி பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்பதால் உடல்களைத் தேடும் பணி தாமதமாகியுள்ளது.
கட்டடம் இடிந்து விடும் என்ற அச்சத்தால் அங்கு யாரும் நெருங்க முடியவில்லை, ஆளில்லா குட்டிவிமானம் மூலம் எரிந்த கட்டடத்தின் உள்ளே இருப்பதை படம் பிடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.கட்டடத்தின் உள்ளே 120 குடியிருப்புகள் இருப்பதால் குறைந்தது 100 பேர் சிக்கியிருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.
இதனால் உயிர்ச்சேதம் அதிகமாக இருக்கும் என தீயணைப்பு வீரர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். கருகிய நிலையில் 12 உடல்கள் மீட்கப்பட்டுள்ளனர். 78 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 18 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
பத்தாவது மாடியில் இருந்து தாய் ஒருவர் தனது குழந்தையை பிடித்துக் கொள்ளும்படி கோரி, குழந்தையை வீசியெறிய கீழே இருந்த வீரர்கள் அந்தக்குழந்தையை பிடித்துக் கொண்ட நெஞ்சுருகும் காட்சிகளை தீவிபத்தை நேரில் பார்த்தவர்கள் விவரிக்கின்றனர்.
தீ விபத்து காரணமாக அப்பகுதியில் பல சாலைகள், டியூப் ரயில் பாதைகள் மூடப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொண்டு நிறுவனங்கள் சார்பில் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
Labels:

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.