உள்ளாட்சி தனி அலுவலர் பதவிக் காலம் மேலும் 6 மாதம் நீட்டிக்கும் சட்ட முன்வடிவு நிறைவேற்றம்.


உள்ளாட்சி அமைப்புகளின் தனி அலுவலர் பதவிக்காலம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்க வகை செய்யும் சட்ட முன்வடிவு பேரவையில் இன்று நிறைவேற்றப்பட்டது. இதற்காக சொல்லப்படும் காரணம் ஏற்புடையதல்ல என்று கூறி திமுக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
சட்டப்பேரவையில் இன்று ஊரக உள்ளாட்சி அமைப்புகள் சட்டங்களில் திருத்தம் செய்ய வகை செய்யும் சட்டமுன்வடிவை உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிமுகம் செய்தார். உடனே இந்த சட்டமுன்வடிவு ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் இருப்பதாலும், தேர்தல் ஏற்பாடுகளுக்கு தேவைப்படும் காலஅளவு காரணமாகவும் உள்ளாட்சி அமைப்புகளின் தனி அலுவலர்கள் பதவிக்காலத்தை வரும் டிசம்பர் 31-ம் தேதி வரை மேலும் ஆறுமாத காலத்துக்கு நீட்டிப்பு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து சட்டமுன்வடிவை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிமுகம் செய்தார்.
அதன் மீதான விவாதத்தின்போது எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் உறுப்பினர் விஜயதரணி ஆகியோர் எதிர்த்தனர். அதைத் தொடர்ந்து திமுக, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உறுப்பினர் அபுபக்கரும் மேற்கண்ட காரணத்துக்காகவே வெளிநடப்பு செய்தார்.
அதற்குப் பிறகு உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசுகையில், 'நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் முடிவடைந்து, நீதிமன்றம் உத்தரவிட்டால் உள்ளாட்சி தேர்தலை நடத்த அரசு தயாராக உள்ளது. தனி அலுவலர்கள் பதவி நீட்டிப்பு தற்காலிகமானதுதான். எனவே, இந்த சட்டமுன்வடிவை நிறைவேற்றித் தர வேண்டும்' என்று கேட்டுக்கொண்டார். அதன்பிறகு குரல் வாக்கெடுப்பு மூலம் சட்டமுன்வடிவு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.