உயர்நீதிமன்ற வழக்கறிஞருக்கு அரிவாள் வெட்டு, கலங்கரை விளக்கம் அருகே பரபரப்பு.


சென்னையில் பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் வழக்கறிஞர் ஒருவர் ஓட ஓட அரிவாளால் வெட்டப்பட்டார்.
சென்னை ஐஸ்ஹவுஸ் பகுதியைச் சேர்ந்த கேசவன் என்பவர், உயர்நீதிமன்ற வழக்கறிஞராக உள்ளார். இன்று காலை தமது குழந்தைகளை பள்ளியில் விட்டுவிட்டு, கலங்கரை விளக்கம் ரயில் நிலையம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல், சரமாரியாக அரிவாளால் வெட்டியது. தலை, கழுத்தில் வெட்டுபட்ட அவர் உயிர்பிழைக்க தப்பி ஓடினார்.


இருப்பினும், பொதுமக்கள் முன்னிலையிலேயே அவரை சுற்றிவளைத்து அந்த கும்பல் சரமாரியாக வெட்டியது. இதைப்பார்த்த பொதுமக்கள் கூச்சலிட்டதால் அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடியது. உடனடியாக அங்கிருந்தவர்கள் ஆம்புலன்சை வரவழைத்து, உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அவரை, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆபத்தான நிலையில் உள்ள வழக்கறிஞர் கேசவனுக்கு, அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் நடைபெற்ற பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி மெரினா போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
உயர்நீதிமன்றத்தில், குற்றவியல் வழக்குகள் தொடர்பாக கொடுக்கல், வாங்கல் பிரச்சனைகள் இருந்ததால், அது தொடர்பாக இந்த தாக்குதல் நடந்திருக்கக் கூடும் எனக் கூறப்படுகிறது.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.