சீனா நிலச்சரிவில் 100க்கும் மேற்பட்டோர் புதைந்திருக்கலாம் என்று அச்சம்.


சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் நூற்றுக்கும் மேற்பட்டோர் மண்ணில் புதைந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
சிச்சுவான் மாகாணம் ஜின்மோ (xinmo) என்ற கிராமத்தில் அதிகாலை நிலச்சரிவு ஏற்பட்டது. மலையின் பாதி பாகம் சரிந்ததில் கிராமத்தில் இருந்த 40க்கும் மேற்பட்ட வீடுகள் புதைந்தன. மண் மற்றும் பாறைகள் சரிந்ததில் 100க்கும் மேற்பட்டோர் தப்பிக்க வழியில்லாமல் மண்ணில் புதைந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. தகவல் அறிந்து அங்கு விரைந்த மீட்புக்குழுவினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
பாறைகளாக சரிந்து கிடப்பதால் மீட்புப் பணியில் சிரமம் ஏற்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜின்மோ கிராமத்தின் வழியாக பாயும் நதியின் 2 கிலோ மீட்டர் வழித்தடத்தை நிலச்சரிவு மூடிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
Labels:

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.