அங்கீகாரம் இல்லாத வீட்டுமனைகளை ஒழுங்குபடுத்தும் அரசின் புதிய விதிகளுக்கு எதிர்ப்பு.


அங்கீகாரமில்லாத வீட்டுமனைகளை வரைமுறைபடுத்த, தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை எதிர்த்து ரியல் எஸ்டேட் உரிமையாளர் சங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. அங்கீகாரமில்லாத நிலங்களையும், விளைநிலங்களையும் வீட்டுமனைகளாக பத்திரபதிவு செய்ய கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது. இது தொடர்பாக தமிழக அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டுமென உத்தரவிட்டிருந்தது.
அதன்படி அங்கீகாரமில்லாத வீட்டு மனைகளை வரைமுறைப்படுத்த கடந்த மே மாதம் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அதில், 2016ம் ஆண்டு அக்டோபர் 20 ஆம் தேதி முன் வாங்கப்பட்ட அங்கீகாரமில்லாத வீட்டு மனைகளை பத்திரப்பதிவு செய்ய அந்த நிலத்தின் சந்தை மதிப்பை விட 3 சதவீதம் கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டது.
இது நடைமுறைக்கு சாத்தியமில்லாதது என்றும் அந்த அரசாணையை ரத்து செய்ய கோரியும் ரியல் எஸ்டேட் உரிமையாளர் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நில வழிகாட்டு மதிப்பீட்டு தொகையை 33 சதவீதம் வரை குறைத்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்திருப்பது ஏமாற்று வேலை என்றும் ரியல் எஸ்டேட் சங்கம் தரப்பு மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
வழக்கறிஞர் யானை ராஜேந்திரனின் பத்திரப்பதிவு தொடர்பான வழக்கு விசாரணைக்கு வரவுள்ள நிலையில், அதனுடன் இந்த வழக்கையும் சேர்த்து விசாரிக்க வேண்டும் என்ற ரியல் எஸ்டேட் உரிமையாளர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.