பஞ்சாப் பொற்கோவிலில் மீண்டும் காலிஸ்தான் தனி நாடு முழக்கம்.


பஞ்சாப் தலைநகர் அமிர்தசரஸ் பொற்கோவிலில் மீண்டும் காலிஸ்தான் தனி நாடு முழக்கங்கள் எழுப்பப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஆபரேஷன் புளு ஸ்டார் நடவடிக்கையில் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நூற்றுக்கணக்கான சீக்கியர்கள் பொற்கோவிலுக்குள் திரண்டனர்.
அப்போது அவர்கள் வாள்களை உயர்த்திப் பிடித்து காலிஸ்தான் ஜிந்தாபாத் என்ற கோஷங்களை எழுப்பினர். இந்தியா மற்றும் பாகிஸ்தானில் சீக்கியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளை ஒருங்கிணைத்து காலிஸ்தான் என்ற பெயரில் தனி நாடு கோரிக்கை முன்னெடுக்கப்பட்டது.
ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட சீக்கியர்களை 1984ம் ஆண்டு பிரதமராக இருந்த இந்திரா காந்தி, ஆபரேஷன் புளு ஸ்டார் என்ற ராணுவ நடவடிக்கை மூலம் ஒடுக்கினார். இதில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். இதன் எதிரொலியாகத்தான் இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.